சர்வதேச நாடுகளின் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்ள மியான்மர் முன்வந்துள்ளது.
.
மியான்மர் நாட்டை கடந்த வாரம் நர்கீஸ் புயல் தாக்கி வரலாறு காணாத சேதத்தை உண்டாக்கியது. இதில் 1 லட்சம் பேருக்கு மேல் பலியானார்கள்.
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. எனினும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் நிவாரண உதவியை மியான்மர் ராணுவ அரசு ஏற்க முன்வரவில்லை.
மேலும் சர்வதேச நாடுகளில் நிவாரண ஊழியர்களையும் அனுமதிக்க மறுத்துவிட்டது. சர்வதேச நாடுகளின் நிதியுதவியை ஏற்க வேண்டும் என ஐ.நா. சபை, மியான்மருக்கு வேண்டுகோள் விடுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுடன் பேச்சு நடத்தி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று இந்தியாவிற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளில் நிதி மற்றும் நிவாரண உதவியை மியான்மர் ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பதாக அறிவித்துள்ளது.
மியான்மருக்கான ஐ.நா. தூதர் இதனை அறிவித்துள்ளார். எனினும் நிவாரணப் பணியில் ஈடுபட காத்திருக்கும் தொண்டர்களை அனுமதிக்க மியான்மர் தொடர்ந்து மறுக்கிறது. தற்போது இந்த தொண்டர்கள் தாய்லாந்தில் காத்திருக்கின்றனர்.