நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் ஆர்ப்பாட்டம் செய்த சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட திபெத்தியப் பெண்களைப் போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இவர்களில் பலர் பௌத்த பெண் துறவிகள் என்று கூறப்படுகிறது.
திபெத் தொடர்பான சீனக் கொள்கைகளுக்கு எதிராகப் புலம் பெயர்ந்து வாழும் திபெத்தியர்கள் கடந்த சில வாரங்களாக கத்மண்டுவில் தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் கடைசியாக நடந்தது பெண்கள் மட்டும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம். இதில்தான் அதிக கைதும் நடந்துள்ளது. நேபாள அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முறியடித்ததாகக் கூறப்படுகின்றது.
நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை இந்த ஆர்ப்பாட்டங்கள் பாதிக்கும் என்று நேபாள அரசு கருதுகிறது.