லெபனானில் அரசுக்கு ஆதரவான மற்றும் எதிரான போராளிகளுக்கு இடையே நடக்கும் கடும் மோதல் இப்போது பெய்ரூட்டுக்கு அருகே தெற்கிலுள்ள ட்ரூஸ் பிரிவினர் அதிகம் வாழும் மலைப்பகுதிகளுக்குப் பரவியுள்ளது.
மலைப் பகுதிக் கிராமங்கள் பலவற்றில் ஹெஸ்புல்லா அணியும் அதன் தோழமைக் குழுக்களும் பிரதான ட்ரூஸ் தலைவர் வாலித் யும்பலத் அவர்கள் தலைமையிலான கட்சியுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெஸ்புல்லா அமைப்பினால் துரோகி என வர்ணிக்கப்பட்ட யும்பலத் ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புள்ள இதர ட்ரூஸ் தலைவர்களை சண்டையை முடிக்க மத்தியஸ்தம் செய்யும்படி கேட்டுள்ளார்.
லெபனானின் இரண்டாவது பெரிய நகரான திரிப்பொலியில் சனிக்கிழமை இரவு நடந்த மோதல்களைத் தொடாந்து அண்மைய மோதல்கள் நடக்கின்றன.
மோதல்களை நிறுத்துவதற்காக ராணுவம் இப்போது அங்கே கொண்டு வரப்பட்டுள்ளது.