சீனாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.அம்மாகாணத்தின் தலைநகரான செங்க்டுவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
செங்டுவின் வட மேற்கு பகுதியில் 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் சீன தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய், பாங்காங் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள தெரிவித்தனர்.
இதனிடையே இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.