தைவானில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
தைவானின் தைடுங் நகரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.27 மணிக்கு முதன் முறையாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.
இதன் பின்னர், அதிகாலை 5.27 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலும், காலை 8.04 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில், தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.