நேபாள மன்னர் எதிருவரும் 28ம் நாளுக்கு முன்னர் மன்னரின் அரண்மனையை விட்டு வெளியேறவேண்டும் என காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது. நேபாள மன்னர் ஞானேந்திரா தங்கியுள்ள நாராயண்ஹிதி அரண்மனையில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் வெளியேற கெடு அளிக்கப்பட்டுள்ளதாக மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
மன்னர் அரண்மனையை விட்டு வெளியேற மன்னர் மறுத்தால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். மன்னராட்சியை பிரதிபலிக்கும் எந்த நடவடிக்கைக்கும் மாவோயிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்காது என்றும் அவர் கூறினார்.
பிரசண்டா, அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள மன்னர் ஒத்துழைத்தாலும், சாதாரண குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமையே, மன்னருக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.