சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவானில் மூன்று நாட்களுக்கு முன்னர் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தில் 19,500 பேர் இறந்திருப்பதாக தெரிய வருவதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை; அதிகாரிகள் 50,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
முன்னதாக சீன அரசு, அங்கு மீட்புப்பணிகளுக்குத் தேவையான சுத்திகள், பாரந்தூக்கிகள், மண்வெட்டிகள், ரப்பர் படகுகள் போன்ற கருவிகளை நன்கொடையாக தந்துதவுமாறு, மக்களிடம் கோரியிருக்கிறது.
உயிர் தப்பியவர்களில் பலர் அகதிகள் முகாம்களில், போதிய உணவோ அல்லது சுத்தமான தண்ணீரோ இல்லாமல் இருக்கின்றனர்.
சுமார் 400க்கும் மேற்பட்ட அணைகள் சேதமடைந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அவைகளை பலப்படுத்த மேலதிக படையினர் அனுப்ப்பட்டு வருகின்றன