ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. 50 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து 2 பெண்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதில் 246 ஆண்களும் அவர்களை எதிர்த்து 27 பெண்களும் போட்டியிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரோலா தஷ்டி குறிப்பிடத்தக்கவர். இவர் 40களின் மத்தியில் இருக்கிறார். ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களிலேயே அதிக எண்ணிக்கையில் ஓட்டுக்கள் பெற்றார்.