தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள அமேசான் நதியும், ஆற்றுப்பாதையில் அமைந்துள்ள மழைக்காடுகளும் அப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் பெருமளவு சார்ந்திருக்கும் வளங்களாக அமைந்துள்ளன. அதேநேரம் உலக தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பதிலும் அவை பெரும் பங்கு வகிக்கின்றன.
அமேசான் மழைக்காடுகளை வைத்துப் பணம் பண்ணலாம். காட்டிலுள்ள மரங்களை வெட்டி, வெட்டிய மரங்களை விற்று, காட்டைத் திருத்திய நிலத்தில் விவசாயம் செய்து, இப்படி பலவழிகளில்.
கடந்த சில ஆண்டுகளில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்ததை அடுத்து , காட்டு நிலத்தை விவசாயத்துக்கு மாற்றுவது என்பதற்கு பொருளாதார ரீதியான காரணங்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் இதன் மேல் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
எண்ணெய் விலை உயர்வு , கரும்பு சோயா போன்ற பயிர்களிலிருந்து பெறப்பட்டு, போக்குவரத்துக்கு எரிபொருளாக உபயோகப்படுத்தப்படும் தாவர எண்ணெய் பயிர்களைப் பயிரிடவேண்டும் என்ற எண்ணத்தையும் அதிகரிக்கிறது.
எனவே, மர வியாபாரிகளும் விவசாயிகளும் இதில் பெரும் லாபத்தை எதிர்நோக்குகிறார்கள்.