பர்மாவில் இருந்து தற்போது வந்துள்ள விபரங்களின் படி நர்கீஸ் சூறாவளியால் அங்கு, சுமார் எழுபத்தெட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதுடன், மேலும் ஐம்பத்தாறாயிரம் பேரைக் காணவும் இல்லை.
வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்பதால், உண்மையான மனித இழப்பு பெருமளவு இருக்குமோ என்று அஞ்சப்படுகின்றது.
உயிர் தப்பியவர்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் டாலர்கள் உதவி கோரியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், பர்மா மிகவும் பாரதூரமான அளவில், மனிதப் பேரழிவை எதிர்கொள்கிறறது என்று எச்சரித்துள்ளது.