நைஜீரியாவில் நேற்று கச்சா எண்ணெய்க் குழாய் வெடித்துச் சிதறி எரிந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நைஜீரியா லாகோஸ் நருக்கு அருகாமையில் உள்ள லெகான் கிராமத்தில் கச்சா எண்ணெய் செல்லும் குழாய் மீது வீதிப் புனரமைப்பில் ஈடுபட்ட புல்டோசர் வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.
இதனையடுத்து கச்சா எண்ணெய்க் குழாய் வெடித்து சிதறி தீப்பற்றிக்கொண்டது. தீ அருகில் உள்ள கட்டிடங்கள் பாடசாலை போன்றவற்றுக்குப் பரவியது. மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். சன நெரிசல் காரணமா பலர் தீயில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா எண்ணெய் வளம் உள்ள நாடு. உலகில் எண்ணெய் ஏற்றுமதியில் 8 இடத்தை வகிக்கும் நாடாகவும் இருந்து வருகின்றது. இங்கே அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவது வழமை எனத் தெரிவிக்கப்படுகின்றது.