பாலஸ்தீனத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்க மாட்டோம், என சர்வதேச பயங்கரவாதி ஒசாமா எச்சரித்துள்ளான். இஸ்ரேல் நாடு உருவான 60ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் புஷ் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையே சர்வதேச பயங்கரவாதி ஒசாமா, ஆடியோ கேசட்டில் தன்னுடைய பேச்சை வெளியிட்டுள்ளார்.
அதில் அவன் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் நாடு உருவான 60ம் ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன் "இஸ்ரேல்' என்ற நாடு இல்லை, என்பது தெளிவாகிறது. பாலஸ்தீனத்திலிருந்து வலுகட்டாயமாக பிடுங்கப்பட்ட இடம் தான் இஸ்ரேலாக உருவாகி இருக்கிறது. யூதர்களுக்கு எதிரான போர் தொடரும். இஸ்ரேல் மற்றும் அதன் தோழமை நாட்டுக்கு எதிராக சண்டையிட கடவுள் எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த பூமியில் உண்மையான முஸ்லிம் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்க முடியாது.
பாலஸ்தீனர்கள் பயங்கரவாதிகள்; இஸ்ரேல் நாட்டவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது போல மேற்கத்திய நாட்டு பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டையின் எதிரொலியாகத்தான் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இவ்வாறு ஒசாமா கூறியுள்ளார்