மலேசிய ஆளும் கட்சியில் இருந்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது விலகி உள்ள நிலையில், பிரதமர் அப்துல்லா படாவி தலைமையிலான ஆட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.22 ஆண்டுகளாக அந்நாட்டு பிரதமராக மகாதிர் இருந்துள்ளார். இவர்தான்,படாவியை, தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்து அவரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தவர்.கடந்த மார்ச் 8ஆம் திகதி இடந்ம்பெற்ற பொதுதேர்தலில் அப்துல் படாவி தலைமையிலான ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது.ஆனால் அதற்கு முந்தைய பொதுத்தேர்தலைகளைவிட மிக குறைந்த இடங்களைதான் அந்த கட்சி கைப்பற்ற முடிந்துள்ளது.. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அப்துல் படாவி பதவி விலகவேண்டும் என்று மகாதிர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில்,இதனை ஏற்க படாவி மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் படாவியின் செயற்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும்,அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகாதிர் அறிவித்துள்ளதாகவும்,ஐக்கிய மலாய் தேசிய கழகத்திலிருந்து இதர நிர்வாகிகளும் விலகவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்,தெரிவிக்கபடும்
அதேவேளை,படாவியை எதிர்த்து வெளியேறுபவர்கள் எதிர்கட்சிக்கு சென்று விடவேண்டாம் என்றும், கட்சி தலைமையில் மாற்றம் வரும்போது தன்னுடன் சேர்ந்து மீண்டும் கட்சியில் இணையலாம் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளதாகவும் குறிப்பிடபடுகிறது.மகாதிரின் அதிரடி நடவடிக்கையால், படாவி தலமையிலான அரசுக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மகாதிரின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும்,இதனால் கட்சியில் தனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் படாவி கூறியுள்ள நிலையில்,.வரும் டிசம்பரில் நடக்க போகும் தேர்தலில் தனது பொறுப்பை நிலைநாட்டும் வகையில் வெற்றிபெற்று காட்டுவேன் என அவர் தெரிவித்துள்ளதாகவும்,மலேசிய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.