ஓய்வு பெறுவதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் புஷ் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் துணை அதிபர் டிக் செனேயுடன் பேச்சு வார்த்தை வார்த்தை நடத்தினார். இதில், தீவிரவாத நடவடிக்கைகளை வேரறுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள ஆர்மி ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி விபரம் வருமாறு:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அடுத்த ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், ஓய்வு பெறும் முன்பாகவே ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கான்டலீசா ரைஸ் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கையை புஷ் காலதாமதம் செய்து வருகிறார்.
ஈரானின் உதவியுடன் லெபனானில் தனது அமைப்பை ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு வலுப்படுத்தி வருகிறது. இதனால்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இதுதவிர, தீவிரவாதத்திற்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு தருகிறது. இதனால், ஈரான் போன்ற நாடுகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி வைப்பதுதான் உலக அமைதிக்கு வழி என்பதில் புஷ் உறுதியாக உள்ளார்.
இதனால், தனது பதவிக்காலம் முடிவதற்குள் ஈரான் மீது தாக்குதல் நடத்த புஷ் உத்தரவிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.