ஜேர்மனிய நாசிப் படைகளால் வன்பறிப்பு செய்யப்பட்டிருந்த டென்மார்க் நாட்டினை விடுவிப்பதற்காக போராடி மறைந்த டென்மார்க் விடுதலைப் போராளிகளை நினைவு கூரும்
மே 4 ஆம் நாள் "ஒன்று கூடல்"
நிகழ்வுக்கு அந்நாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
பில்லுண்ட் சென்ரில் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் நாள் இரவு 7:00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
நிகழ்வில் டென்மார்க் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரின் மகன், டென்மார்க் மக்கள் கட்சி பிரதிநிதி உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
ஓன்று கூடலின் இறுதியில் போராளிகளின் நினைவுத் தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட உள்ளது.