ரொறன்ரோ மாநகரில் செயற்பட்டு வரும் தமிழ்க் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 2008 மே மூன்றாம் நாள் தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு நடைபெற்றுள்ளது.
கனடா ரொறன்ரோ மாநகர மாணவர் தமது தாய் மொழியான தமிழைக் கற்பதற்கான வாய்ப்பு உள்ளது. இப்பொழுது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்; தமிழ்க் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ் திறமைத் தேர்ச்சி (9-12) வகுப்புகளில் கற்று வருகின்றனர்.
கனடாவில், ஒரு மாணவன் தனது இரண்டாம் நிலைக் கல்வியை முடிப்பதற்கு முப்பது திறமைத் தேர்ச்சிகளைப் பெறவேண்டும். அதில் நான்கு திறமைத் தேர்ச்சிகளைத் தமிழில் பெறமுடியும். மேலும், பல்கலைக்கழகம் நுழைவதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் ஆறு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும். மருத்துவம், பொறியியல், நிருவாகம், சட்டம் உள்ளிட்ட எத்துறைக்கும் தமிழ் மதிப்பெண்ணைச் சேர்க்க முடியும்.