கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் மெற்றாஸ் மெயில் எழுதிய “அதிபர் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் நூலினை குருகுலராஜா அவர்கள் வெளியிட்டு வைக்க, அதனை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன் பெற்றுக்கொண்டர்.
இந்நிகழ்வில் நூலாசிரியர் தமிழீழக் கல்விக்கழகத்திற்கு வழங்கிய இலவசப் பிரதிகளை கல்விக்கழகத் துணைப்பொறுப்பாளர் சி.புலிமறவன் பெற்றுக்கொண்டார்.
இந்நூல் பற்றி கருத்துரைத்த வலயக்கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள், அதிபர்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் இதில் அடங்கியுள்ளதுடன் நூலாசிரியர் பல்வேறு கல்வி நிர்வாகப் பணிகளில் பணிபுரிந்த பட்டறிவுக் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. இந்நூல் அதிபர், ஆசிரியர்களுக்கான நல்லதோர் வழிகாட்டி என்றார்.
இந்நிகழ்வில் கல்விசார் உத்தியோகத்தர், வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.