கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்து மற்றும் வலைப்பந்துப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெற ஏற்படாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆண் பெண்களுக்கான கரப்பந்து போட்டி கண்டாவளை ரூபன் விளையாட்டுத்திடலில் இன்றும், பெண்களுக்கான வலைப்பந்து போட்டி முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுத் திடலில் நாளையும் நடைபெற ஏற்பாடகியுள்ளதாகத் தெரிவித்த அவர், அறிவிக்கப்பட்டபடி அணிகள் குறித்த நேரத்திற்கு சமுகமளிக்கத் தவறும் பட்சத்தில் போட்டிகளிலிருந்து விலக்கப்படுமெனவும் தெரிவித்தார்.