08-07-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
குறைந்த திறன் கொண்ட மைக்ரோசிப் வடிவமைப்பு நிறுவனமான பி.ஏ. செமியை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.இதன்மூலம் ஆப்பிள் இங் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட், மெசின்டோஷ் உற்பத்திக்கு முக்கிய சிப்கள் தயாரிப்பு முறைப்படுத்தப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செமி நிறுவனத்தை ஆப்பிள் கையகப்படுத்தும் தகவல் முதலில் ஃபோர்ப்ஸ் இதழில் வெளியானது. இதனை ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீவ் டோவ்லிங் உறுதிப்படுத்தினார்.
என்றாலும் இந்த கையகத்திற்காக எவ்வளவு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
ஆப்பிள் நிறுவனம் சிறு தொழில்நுட்ப நிறுவனங்களை அவ்வப்போது வாங்கி வருவதாகவும், அதற்கான காரணம் அல்லது திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்டும் டோவ்லிங் கூறினார்.
என்றாலும் ஃபோர்ப்ஸ் இதழில தெரிவிக்கப்பட்ட படி, பி.ஏ. செமியை வாங்குவதற்காக சுமார் 278 மில்லியன் டாலரை ரொக்கமாக ஆப்பிள் வழங்கியதாகத் தெரிகிறது.
இதுபற்றி கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பி.ஏ. செமி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை |