29-04-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவர், ரகசிய காவல்துறையினரின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது. விசாரணை செய்யப்பட்டு வந்தநிலையில் குறித்த யுவதி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென சுகவீனமடைந்தார் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் பெயரை ரகசிய காவல்துறையினர் வெளியிடவில்லை.
|