02-05-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு) சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீழ தேசியக்கொடியையும் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அவர்களின் விருப்பத்தை குரல் கொடுத்தது வெளிப்படுத்தினர். எங்களுக்கு தேவை தமிழீழம் தமிழீழ மக்களின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழீழ தேசியத்தின் பாதுகாப்பு படை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற கோசங்கள் பேரணி நிறைவடையும் வரை ஒலித்தது. இளையோர் அமைப்பினால் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட தொழிலாளர் நாள் அறிக்கையும் சுவிஸ் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஊர்தியில் ஒலிபெருக்கி மூலமாக தமிழீழ தேசத்து மக்களின் துயர்,விருப்பு என்பன பற்றியும் ஜேர்மன் மொழியில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆரம்பத்தில் மழை வந்தபோதிலும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் உற்சாகம் குன்றிவிடவில்லை. பெருமளவானவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள். கடந்த ஆண்டிலும் பார்க்க இம்முறை மிக்கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை நகர்ந்த பேரணி பெல்வி (Bellevue) பகுதியில் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளையின் பேச்சாளர் திரு அல்பேட்டின் உரையுடன் ஊர்வலம் நிறைவு பெற்றது.
|