சிறீலங்காவின் பாரானுமன்றம் நாளையில் இருந்து ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முடிவை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபச்ச எடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போர் முனையில் ஏற்பட்ட பின்விளைவுகளினாலும், ஊழல் குற்றச்சாட்டுகளின் தாக்கங்களினாலும் இந்த முடிவை சிறீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளது என பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியதோடு, கண்டித்தும் உள்ளது.