இலங்கையில் எயிட்ஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு தர்ம ஸ்தாபனங்கள், 40 ஆயிரம் டொலர்களை பெற்றுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
லங்கா பிளஸ் என்ற அமைப்பும், எலைன்ஸ் என்ற அமைப்புமே இந்த நிதியுதவியை பெற்றுள்ளன. இவை இரண்டும் சமூகத்தின் அடித்தளத்தில் சென்று சேவையாற்றக்கூடியவை என்ற அடிப்படையிலேயே இந்த நிதியுதவிகள் வழங்கப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 1000 விண்ணப்பங்களில் இருந்தே இந்த தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே எயிட்ஸ் நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்படுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து உலக வங்கி தமது நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.